கிழக்கிந்திய கம்பெனியை வாங்கினார் இந்திய தொழிலதிபர்
லண்டன், ஆக. 13: கிழக்கிந்திய கம்பெனியை லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா வாங்கியுள்ளார்.
÷ஒருகாலத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த கிழக்கிந்திய கம்பெனி, இப்போது லண்டனில் சிறிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதனை 2005-ம் ஆண்டிலேயே வாங்கியுள்ள சஞ்சீவ் மேத்தா, இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் மீண்டும் புதிதாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
÷இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் மும்பையைச் சேர்ந்தவன். 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனுக்கு வந்துவிட்டேன். 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனைவரால் அறியப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியை வாங்கி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியர் ஒருவரே இப்போது கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளர் என்பது சிறப்பான விஷயம். இந்தப் பெயரில் தொழிலை பெரிய அளவில் நடத்தவுள்ளேன் என்றார் அவர்.
÷கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வணிகம் மேற்கொண்ட அந்த நிறுவனம், பிற்காலத்தில் அந்தநாடுகளையே அடிமைப்படுத்தியது. தனக்கென்று தனி ராணுவம், பணம் என பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது. 1874-ல் இந்த நிறுவனம் பிரிட்டனின் அரசுடமை ஆக்கப்பட்டது.
No comments:
Post a Comment